டெக்சாஸஸின் கோலிவில்லி பகுதியில் அமைந்துள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு நபர்களை அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியக (FBI) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Live updates: Hostage situation at synagogue in Colleyville, Texas

துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவருடனான சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலான போராட்டத்தின் பின்னர் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி இறந்துவிட்டதாக கோலிவில்லி காவல்துறைத் தலைவர் மைக்கேல் மில்லர் கூறினார், ஆனால் அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

துப்பாக்கிதாரியின் அடையாளத்தை வெளியிட மாட்டோம் என்று FBI கூறியது.

சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி காலை 10:41 மணிக்கு (16:41 GMT) கோலிவில்லி காவல் துறைக்கு, இணையத்தில் ஒளிபரப்பப்படும் ஷபாத் சேவையின் போது இந்தச் சம்பவம் முதலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பொலிஸார் பாதுகாப்பு குழுக்களை நியமித்து தேவாலய பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்றினர்.

இந்த நடவடிக்கையில் சுமார் 200 சட்ட அமலாக்கப் பணியாளர்கள் பங்கேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.