முப்­பத்­தைந்து வய­திற்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு அதி­லி­ருந்து ஏழு ஆண்­டு­க­ளுக்குள் முட்­டையின் வளர்ச்சி வீதம் 5 சத­வீ­த­மாக குறைந்­து­விடும் என்று கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் குழந்­தை­யின்­மைக்­கான சிகிச்சைப் பெறுவ தற்கு அவர்­களின் வயது ஒரு முக்­கிய காரணி யாக அமைந்­தி­ருக்­கி­றது. அத்­துடன் 45 வயதைக் கடந்த ஒவ்­வொரு பெண்­ம­ணிக்கும் புற்று நோய் தாக்­கக்­கூடும் என்ற பயம் இயல்­பா­கவே இருக்­கி­றது. அவை மார்­பக புற்று நோயாக இருக்­கலாம் அல்­லது கருப்பை வாய் புற்று நோயாக இருக்­கலாம். அதே போல் 45 வய­திற்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு வெள்­ளைப்­ப­டுதல் ஏற்­பட்டால் இது புற்­று­நோயின் அறி­கு­றி­யாக இருக்­குமா? என தெரிந்­து­கொள்­கின்­றனர்.” என்று மகளிர் நலம் மற்றும் இன்­றைய திக­தியில் பெண்கள் சந்­திக்கும் பிரச்­சி­னைகள் குறித்து எம்­முடன் இயல்­பாக பேசத்­தொ­டங்­கு­கிறார் டொக்டர். கீதா ஹரிப்­ரியா. இலங்­கையைத் தவிர்த்து வங்­கா­ள­தேசம், இந்­தியா மற்றும் தென்­னா­சியா முழு­மைக்கும் மகப்­பேறின்மை மருத்­துவத்திற்­கான சிறப்பு மருத்­துவ நிபு­ண­ராக இவர் சேவை­யாற்றி வரு­கிறார் என்­பது குறிப்­பிடத்தக்­கது.

மாத­விடாய் கோளா­று­களை எப்­படி தடுப்­பது அல்­லது அதற்­கான சிகிச்சை என்ன?

மாத­விடாய் என்­பது முதலில் எதற்­காக மாதந்­தோறும் வரு­கி­றது என்­பதை தெரிந்த கொள்ள வேண்டும். உடலில் உள்ள ஹோர் மோன் சுரப்­பி­களால் ஏற்­ப­டு­கி­றது. இந்த சுரப்­பி­களின் பணி மற்றும் செயல்­பாடு சீராக இருந்தால் எந்த கோளாறும் ஏற்­ப­டாது. அடுத்­தது முட்டைப் பை. ஒவ்­வொரு மாதமும் இங்கு தான் முட்டை வளர்ந்து முட்டை வெளி­யா­கி­றது. இத­னை­ய­டுத்து கர்ப்­பப்பை. உதி­ர­போக்கு என்­பது இங்­கி­ருந்து தான் தொடங்­கு­கி­றது. அதனால் இங்கு ஏதேனும் சிக்­கல்கள் இருந்தால் கோளா­றுகள் வரு­வ­தற்கு வாய்ப்­புண்டு. ஹோர்­மோனைப் பொறுத்­த­வரை ைதரொய்ட் சுரப்­பியின் செயல்­பாடு முக்­கிய மானது. இவை அதி­க­மா­கவோ அல்­லது குறை­வா­கவோ சுரக்­கக்­கூ­டாது. இது குறித்து மருத்­து­வர்­களை சந­்தித்து ஆலோ­ச­னையும் சிகிச்­சையும் எடுத்தால் இது சீர­டையும் அல்­லது கட்­டுக்குள் கொண்­டு­வ­ர­ இ­யலும். அதே போல் புரொ­லாட்டீன் என்ற ஹோர்­மோ­னாலும் சில சிக்­கல்கள் வரக்­கூடும்.

அதே போல் வேறு சில பெண்­க­ளுக்கு முட்டைப் பையில் நீர்க்­கட்­டிகள் உரு­வாகும். இதன் கார­ண­மா­கவும் மாத­விடாய் கோளா­றுகள் ஏற்­படும். இதனை துல்­லி­ய­மாக அறிந்­து­கொள்ள இரத்த பரி­சோ­தனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரி­சோ­த­னைகள் மூலம் தெரிந்­து­கொள்­ளலாம். இந்த ஸ்கேன் மூலம் கர்ப்பப் பையில் கட்­டிகள் இருக்­கி­றதா? என்றும், எதன் கார­ண­மாக உதி­ர­போக்கு ஏற்­ப­டு­கி­றது என்­ப­தையும் கண்­ட­றிய இயலும். அதே போல் முட்டைப் பையில் மூன்று வித­மான கட்­டிகள் இருக்­கலாம். ஒன்று நீர்க்­கட்டி, 25 சத வீத பெண்­க­ளுக்கு குழந்­தை­யின்­மைக்­கான காரணங்கள் இந்த நீர்க்­கட்­டிகள் தான். இதன் கார­ண­மாக முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளி­யா­வதில் சிக்கல் உள்­ளிட்ட பல கோளா­றுகள் உரு­வா­கி­றது. அதா­வது பதினைந்து நாளில் உரு­வா­க­வேண்­டிய முட்டை ஒரு மாதம் அல்­லது இரண்டு மாதம் வரை கூட வளர்ந்து வெளி­யா­கக்­கூடும். இதுபோன்ற பிரச்­சினை­க­ளை­யு­டைய பெண்­களின் உடல் எடை அதிகமாக இருக்கும். இவர்­களின் முகம் உள்­ளிட்ட விரும்பதகாத இடங்­களில் உரோ­மங்கள் வளர்ந்­தி­ருக்கும்.

அதேபோல் முட்டைப் பையில் நீர்க்­கட்­டி­களைத் தவிர சொக்லேட் சிஸ்ட் எனப்­படும் இரத்த கட்­டிகள் உரு­வா­கி­யி­ருக்கும். இது எப்­படி உரு­வா­கி­றது என்றால், மாத­வி­டாயின் போது வெளியா கும் உதி­ரப்­போக்கு வெளி­யிலும் நடை­பெறும். முட்டைப் பையிலும் நடை­பெறும். இவ்­வ­கை­யான இரத்தப் போக்கு மாதந்­தோறும் நடை­பெ­று­வதால் முட்டைப் பையில் சேக­ர­மாகும் குருதி கட்­டி­யாக மாறி­வி­டு­கின்­றன. இருப்­ப­தி­லேயே இவ்­வ­கை­யான கட்­டிகள் தான் சவா­லா­னவை. ஏனெனில் இதனால் மாதந்­தோறும் முட்­டை­யையும், முட்டைப் பையும் ஆரோக்­கி­ய­மாக காத்திடும் வலு­வான தசைகள் இதன் கார­ண­மாக வலு­வி­ழக்கத் தொடங்­கி­விடும். இதனால் குழந்தையின்­மைக்­கான முக்­கிய காரணமாக மாறி­வி­டு­கி­றது. அத்­துடன் மாதவிடாயின் போது வலி ஏற்­ப­டு­வ­தற்கு கார­ணமே இந்த இரத்த கட்­டி­களால் தான் என்று குறிப்­பி­டலாம். ஒரு சில­ருக்கு இந்த இரத்­த­கட்­டிகள் அரி­தாக புற்­று­நோ­யா­கவும் மாற வாய்ப்­புண்டு என்­ப­தையும் குறிப்­பி­ட­வேண்டும். இத­னை­ய­டுத்து கர்ப்­பப்­பையில் தோன்றும் பைப்ரோயிட் கட்­டிகள். இவை ஒன்றோ இரண்டாகக் கூட இருக்­கலாம் அல்­லது நிறைய கட்­டிகள் கூட இருக்­கலாம். எம்­மு­டைய மருத்­துவ அனு­ப­வத்தில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையி­லி­ருந்து 62 பைப்ரோயிட்கட்­டி­களை நீக்­கி­யி­ருக்­கிறேன். அதன் பிறகு அவர்­க­ளுக்கு குழந்தை பாக்­கியம் கிடைத்­தி­ருக்­கி­றது. அதே சம­யத்தில் பைப்ரோயிட் கட்­டிகள் புற்­றுநோய் கட்டி கிடை­யாது. இவை புற்று நோய் கட்­டி­யாக மாறு­வது மிக­மிக அரிது. இந்த பைப்ரோயிட் கட்­டிகள் குழந்­தை­யின்­மையை ஏற்­ப­டுத்­து­கி­றது. அதே போல் ஒவ்­வொரு பெண்­க­ளுக்கும் கரு சிதைவு ஏற்­ப­டு­வ­தற்கும் இந்த பைப்ரோயயிட் கட்­டிகள் தான் காரணம். குழந்தை வளரும் இடத்தில் பைப்ரோயிட் கட்­டிகள் இருந்தால் கருச்­சி­தைவை உண்­டாக்கும். இது­போன்று கருச்­சி­தைவு அடிக்­கடி ஏற்­ப­டு­கி­ற­வர்கள் டொக்­டர்­களின் மருத்­துவ ஆலோ­ச­னை­யையும், சிகிச்­சை­யையும் பெற வேண்டும்.

இதற்­கான சிகிச்­சை­களில் லெப்ரோஸ்­கோப்பி மற்றும் ஹிஸ்ட்­ரோஸ்­கோப்பி மூலம் தீர்­வ­ளிக்க முடியும். ஹிஸ்ட்­ரோஸ்­கோப்பி என்றால் கர்ப்பப்பையில் உள்ளே சென்று ஒளிப்­பெ­ருக்கி மூலம் நன்­றாக கண்­கா­ணிக்க முடியும். இதில் தற்­போது நவீன வர­வாக 3டி லெப்ரோஸ்­கோப்பி அறி­மு­க­மா­கி­யி­ருக்­கி­றது. இதன் மூலம் நான்கு அடி தூரத்தில் உள்ள பொருளை ஒரு அடிக்கும் குறை­வான தொலைவில் துல்­லி­ய­மாக காண முடியும். இதன் மூலம் கர்ப்பப்பையில் உள்ள ஒவ்­வொரு இரத்­தக்­கு­ழா­யையும், ஒவ்­வொரு தசை­க­ளையும் துல்­லி­ய­மாக காண முடியும். அதன் பிறகு நீர்க்­கட்­டி­களை அகற்ற முடியும்.

திரு­ம­ணத்­திற்கு பிறகு குழந்­தை­யின்­மைக்­கான சிகிச்­சை­க­ளையும், ஆலோ­ச­னைகளையும் எப்­போது மேற்­கொள்ள வேண்டும் என்று பரிந்­துரை செய்­வீர்கள்?

இது ஒவ்­வொரு பெண்­களின் வயதைப் பொறுத்து அமையும், திரு­ம­ண­மான தம்­ப­திகள் இள­வ­யது அதா­வது 35 வய­திற்­குள்­ளாக இருந்தால் திரு­ம­ண­மாகி ஒரு ஆண்டு வரை காத்­தி­ருந்து அதன் பிறகு இவ்­வ­கை­யான மருத்­துவ நிபு­ணரை அணு­கலாம். 35 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் என்றால் திரு­ம­ண­மாகி மூன்று அல்­லது ஆறு மாதத்­திற்குள் இயற்­கை­யான முறையில் கரு தரிக்­க­வில்லை என்றால் உட­ன­டி­யாக மருத்­துவ நிபு­ணரை சந்­திப்­பது நல்­லது.

குழந்­தை­யின்­மைக்­காக ஆண்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும் சிகிச்­சைகள் குறித்து?

இவர்­க­ளுக்கு உயி­ர­ணுக்கள் பரிசோதனை கொம்ப்­யூட்டர் முறையில் மேற்கொள்­ளப்­படும். இதன் அடிப்­ப­டையில் அந்த உயி­ர­ணுக்­களின் மர­ப­ணுவில் உள்ள கோளா­று­க­ளையும் துல்­லி­ய­மாக கண்­ட­றிகிறோம். ஒரு சில தம்­ப­தி­க­ளுக்கு அனைத்து பரி­சோ­த­னை­யிலும் வெற்றி கிடைத்­தி­ருக்கும். ஆனால் குழந்தை பாக்­கியம் கிட்­டி­யி­ருக்­காது. இதன் காரணம் ஆண்­களின் உயி­ர­ணுக்­களில் உள்ள குறை­பா­டுள்ள மர­ப­ணுக்­களே. இதன் கார­ண­மாக பெண்கள் அடிக்­கடி கரு­ச்சிதைவிற்கும் ஆளா­வ­துண்டு. இந்த மர­பணு குறைபாடிற்கு ஆண்­களின் புகை­பி­டித்தல், மது அருந்­துதல், மன அழுத்தம் ஆகி­ய­வை­களே கார­ண­மாக அமை­கின்­றன. அத்­துடன் ஒரு சிலர் வெப்ப மய­மாக இருக்கும் இடத்தில் பணி­யாற்­றி­னாலோ அல்­லது மடிக்­க­ணி­னியில் தொடர்ந்து பணி­யாற்­றி­னாலோ இத்­த­கைய குறை­பாடு தோன்ற வாய்ப்­புள்­ளது. அத்­துடன் ஒரு சில­ருக்கு விற்­றமின் குறை பாடு­க­ளாலும் இத்­த­கைய பாதிப்­புக்கு ஆளாக நேரிடும். ஒரு சில ஆண்­க­ளுக்கு விதைப்­பைக்கு செல்லும் இரத்த ஓட்­டத்தில் ஏதேனும் சிக்­கல்கள் தோன்­றி­யி­ருக்­கக்­கூடும். இவர்­க­ளுக்கு ஸ்கோரட்டல் டாப்ளர் என்ற பரி­சோ­த­னையின் மூலம் சிக்கல் இருப்­பது உறு­தி­ப­டுத்­தப்­பட்டால் அவர்­க­ளுக்கு சிறிய அள­வி­லான லெப்ரோஸ்­­கோப்பி சத்­திர சிகிச்சை செய்து, உயி­ர­ணுக்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடியும். விதைப்­பையில் எங்­கேனும் இருக்கும் ஒன்­றி­ரண்டு உயி­ர­ணுக்­களைக் கூட லேசர் போன்ற நவீன சிகிச்­சைகள் மூலம் கண்­ட­றிந்து, அதனை சேக­ரித்து, வளர்த்­தெ­டுத்து குழந்தை பாக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்த முடியும்.

குழந்­தை­யின்­மைக்­கான நவீன சிகிச்­சைகள் குறித்து..?

நவீன சிகிச்­சைகள் என்­பது அதன் வெற்றி வீதத்தை முன்­னி­றுத்தி குறிப்­பி­டு­கிறோம். 1990ஆம் ஆண்­டு­களில் இதன் வெற்றி வீதம் 10 சத­வீதம். ஆனால் இதன் இன்­றைய வெற்­றி­வீதம் 60 முதல் 85சத­வீதம் வரை இருக்­கி­றது. இக்­சியில் ஒரு உயி­ர­ணுவை 400 மடங்கு பெரி­தாக்கி உற்று கண்­கா­ணித்து கரு­வ­கத்­திற்குள் செலுத்­தப்­ப­டு­கி­றது. இதை­விட இம்சி என்ற சிகிச்­சையில் உயிரணுக்கள் 7000 மடங்­கு­ பெ­ரி­தாக்­கப்­பட்டு உற்று கண்­கா­ணித்து கரு­வ­கத்­திற்குள் செலுத்துகிறோம். இவை­யெல்லாம் கரு­த்தரிப்­பிற்­கான சாத்­தி­யக்­கூறை அதி­க­ரிக்­கி­றது. அதே போல் கருவை இன்­கு­பேற்­றரில் வைத்து கண்­கா­ணிக்­கிறோம். இதற்­காக தற்­போது எம்ப்­ரி­யாஸ்கோப் என்ற நவீன கருவி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது மனித உடல்­வெப்­ப­நி­லையை போலவே இதில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.இதில் கருவை வளர்த்­தெ­டுக்­கிறோம். எம்ப்­ரி­யாஸ்கோப் வழி­யாக ஒவ்­வொரு எம்ப்­ரி­ய­யோவின் முழு வளர்ச்­சி­யையும் கண்­கா­ணிக்க முடியும். எமக்கு எந்த எண்­ணுள்ள எம்ப்­ரி­யோவின் வளர்ச்­சியை கணக்­கி­ட­வேண்­டுமோ அந்த எண்­ணுள்ள எம்ப்­ரி­யோவை குறிப்­பிட்டால், அத­னு­டைய முழு வளர்ச்­சியும் திரையில் தோன்றும். இதில் தற்­போது கிட்ஸ் ஸ்கோர் என்ற தொழில்­நுட்பம் அறி­மு­க­மா­கி­யி­ருக்­கி­றது. இதன் போது,கருவின் வளர்ச்­சிக்கு ஒவ்­வொரு எம்ப்­ரி­யோ­விலும் ஒரு எண் வழங்கி கணக்­கி­டப்­ப­டு­கி­றது. இதில் முன்னிலையில் இருக்கும் இரண்டு எம்ப்ரி யோவை தெரிவு செய்து அதனை கர்ப்பப் பையில் வைக்கும் போது கருதரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

அதே சமயத்தில் கர்ப்பப்பையில் வைக்கும் போது எம்ப்ரியோவின் புறஓட்டின் அடர்த்தி யையும் கண்காணிப்போம். ஒருசிலருக்கு இவை இயல்பை விட சற்று தடிமனாக இருக்கும். அதனை லேசர் மூலம் தேவையான அளவிற்கு குறைத்து பயன்படுத்துவோம். அதேபோல் கர்ப்பப்பையில் வைக்கப்படும் எம்ப்ரியோ மீது எம்ப்ரியோ க்ளூம் எனப்படும் ஒருவகையான திரவத்தை பூசுவோம். இது கர்ப்பப்பையில் கரு ஒட்டிவளர்வதற்கு ஏதுவாக அமைகிறது. அதேபோல் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி மூலமாக கர்ப்பப்பையின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக ஸ்க்ராட்ச் டெஸ்ட் என்ற பரி சோதனையை மேற்கொண்டு கருத்தரிப்பை உறுதிப்படுத்துவோம்.