சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆஸி. ஓபன் முதல் சுற்றுப் போட்டிகளுக்கான அட்டவணையில் ஜோகோவிச்சின் பெயர்

Published By: Vishnu

16 Jan, 2022 | 11:47 AM
image

டென்னிஸ் உலகின் நம்பர் வன் வீரரான நோவக் ஜோகோவிச் தனது விசா இரத்து தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், அவுஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றுப் போட்டிகளுக்கான அட்டவணையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகள் திங்கட்கிழமை மாலை மெல்போர்னின் ராட் லேவர் அரங்கில் ஆரம்பமாகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என அவுஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். 

அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.

இதனிடையே அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். 

விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்தார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எனினும் அலெக்ஸ் ஹாவ்கேயின் விசார இரத்து உத்தரவுக்கு எதிராக ஜோகோவிச் பெடரல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

இது குறித்த தீர்ப்பினை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66...

2024-10-08 23:48:29
news-image

20இன் கீழ் மத்திய  ஆசிய சங்க...

2024-10-08 23:21:20
news-image

உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை...

2024-10-08 16:28:06
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024:...

2024-10-08 15:00:26
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண பி...

2024-10-08 02:40:08
news-image

அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும் ...

2024-10-08 02:03:36
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர்...

2024-10-07 13:52:12
news-image

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப்...

2024-10-07 13:14:10
news-image

தேசிய லீக் ஒருநாள் கிரிக்கெட்: யாழ்ப்பாணத்தை...

2024-10-07 13:36:48
news-image

ஸ்கொட்லாந்துக்கு எதிரான  மகளிர் ரி20 உலகக்...

2024-10-06 23:29:24
news-image

பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6...

2024-10-06 20:50:19
news-image

பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

2024-10-05 23:31:16