இலங்கையில் ஒமிக்ரோன் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

15 Jan, 2022 | 04:05 PM
image

நாட்டில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தினால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதனடிப்படையில் இலங்கையில் இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த கலாநிதி சந்திம ஜீவந்தர, மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right