(லியோ நிரோஷ தர்ஷன்)

எந்தவொரு அரசாங்கத்திற்கு நாட்டை நிர்வகிக்க முடியாதளவிற்கு நெருக்கடியான நிலைமையே உருவெடுத்துள்ளது. 

குறிப்பாக  தேசிய பொருளாதாரம் மாத்திரமல்லாது அரச நிர்வாக கட்டமைப்பும் சீர்க்குலைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வருடத்தில் முழு அர்ப்பணிப்புடன்  செயற்பட்டு நாட்டையும் மக்களையும்  மீட்டெடுக்க உறுதிக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே ரணில் விக்கிரமசிங்க  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அடுத்து வரும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் நாட்டை நிர்வகிக்க முடியாதளவிற்கு நெருக்கடியான நிலைமையே உருவெடுத்துள்ளது. 

குறிப்பாக  தேசிய பொருளாதாரம் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு என்பனவும் சீர்க்குலைந்துள்ளது. 

நிலையானதொரு கொள்கை இன்மையே இந்த நெருக்கடிக்கு பிரதான காரணமாகும். எனவே அந்த இலக்கை நோக்கி ஐக்கிய தேசிய கட்சி செயற்பட வேண்டும்.

 மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகள் தொடர்பில் நம்பிக்கை எழுந்துள்ளது. தற்போதை அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் ஐக்கிய தேசிய கட்சி மீதான நம்பிக்கையும் இங்கு முக்கியமானதொன்றாகும்.

எனவே ஆட்சி மாறினாலும் தேசிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு நாட்டை வலுப்படுத்த வேண்டும். 

அவ்வாறானதொரு நிலையான கொள்கை இல்லாவிடின் ஒருபோதும் மீட்டெடுக்க இயலாது. 

இவ்வலருடத்தில் முழு அர்ப்பணிப்புடன்  செயற்பட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.

கட்சி மறுசீரமைப்புகளுக்கு அமைய இளையோருக்கு கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதுவொரு சிறந்த வெளிப்பாடும். தேர்தல்களில் மாத்திரம் அல்ல தேசிய திட்டங்களிலும் இளையோரின் பங்களிப்பு மற்றும் கருத்துகள் இடம்பெற வேண்டும் என்பதே நிலைப்பாடாகும். இதுவே நாட்டின்  தேவையாகவும் உள்ளது என்றார்.