நாட்டை மீட்க ஐக்கிய ஒற்றுமைப்படையணியை நிறுவியது பிரதான எதிர்க்கட்சி

15 Jan, 2022 | 12:01 PM
image

(நா.தனுஜா)

அண்மைய காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற எமது நாட்டை மீட்டெடுப்பதற்கான சக்தி இளைஞர்களிடம் மாத்திரமே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, எனவே நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை ஒன்றுதிரட்டிக்கொள்ளும் நோக்கில் தமது கட்சியின் ஊடாக ஐக்கிய ஒற்றுமைப்படையணியை நிறுவியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் நிறுவப்பட்டுள்ள ஐக்கிய ஒற்றுமைப் படையணியின் அலுவலகத்தை நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனைத்தொடர்ந்து எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சித்தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 கொரேனா வைரஸ் பரவல் காரணமாகவும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் இப்போது எமது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, அதனை மீளக்கட்டியெழுப்புவதற்கான இயலுமை இளைஞர்களிடம் மாத்திரமே காணப்படுகின்றது. 

எனவே நாட்டின் மீட்சியை இலக்காகக்கொண்டு இளைஞர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நோக்கில் எமது கட்சியின் ஊடாக ஐக்கிய ஒற்றுமைப்படையணி என்ற கட்டமைப்பை நிறுவியிருக்கின்றோம். 

அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் செயலாளராக சமிந்த விஜேசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இளைஞர்களை ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டை முன்நோக்கிக்கொண்டுசெல்லும் பயணம் நாளைய தினம் (இன்று) இரத்தினபுரியில் ஆரம்பமாகவிருப்பதுடன் நாளை மறுதினம் (நாளை) பதுளையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனூடாக இளைஞர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுக்கும் அதேவேளை, தன்னலமற்றதும் சுதந்திரமானதுமான இளைஞர் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே தற்போதைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க விரும்பும் இளைஞர்கள் இரத்தினபுரியிலும் பதுளையிலும் ஐக்கிய ஒற்றுமைப்படையணியினால் முன்னெடுக்கப்படவிருக்கும் கூட்டங்களில் எவ்வித இன, மத, கட்சிபேதங்களுமின்றி ஒன்றுதிரளவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19
news-image

 'றோ' தலைவருடனான சந்திப்பு குறித்து பாராளுமன்றத்திற்கு...

2022-11-29 15:32:40
news-image

வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் -...

2022-11-29 15:20:35
news-image

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி...

2022-11-29 18:58:50