விடைபெற்றார் ஜனாதிபதியின் செயலர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர 

15 Jan, 2022 | 10:12 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதியின் செயலர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர நேற்று ( 14) அப்பதவியிலிருந்து விடைப் பெற்றுச் சென்றுள்ளார். 

ஏற்கனவே ஜனாதிபதியின் செயலர்  கலாநிதி பி.பீ. ஜயசுந்தர அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே நேற்று அவர் விடை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

 இது தொடர்பில் நேற்று ( 14) ஜனாதிபதி செயலகத்தில், மிக எளிமையான வைபவம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வைபவத்தில் ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ள  நிலையில், அவர்கள் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவுக்கு தமது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் இதன்போது தெரிவித்ததாக அறிய முடிகிறது.

 இந் நிலையில் எதிர்வரும் வாரம் பிரதமரின் செயலர் காமினி செனரத் புதிய ஜனாதிபதி செயலராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதக கடந்த 2021 டிசம்பர் மாதம்  ஆரம்ப பகுதியில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னிலையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், அவரே  நாட்டின் விவசாய, பசளை, பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணம் என தெரிவித்து பதவி விலக்க கோரியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

 இவ்வாறான பின்னணியிலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தை  கடந்த 2021 டிசம்பர் இறுதி வாரத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததுடன்  அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21