(எம்.ஆர்.எம்.வசீம்)

மின் உற்பத்திக்காக நாளாந்தம் 1,500 மெட்டிக்தொன் டீசலை இலங்கை மின்சாரசபைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. 

களனிதிஸ்ஸ மின் உறுபத்தி நிலையத்துக்கு தேவையான டீசல் இல்லாமை காரணமாக நேற்று கொழும்பு, கம்பஹா உட்படநாட்டின் பல பிரதேசங்களில் சுமார் இரண்டரை மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது. 

அதனால் அவசர தேவை கருதி இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நாளாந்தம் 1,500 மெட்ரிக்தொன் டீசலை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

எரிபொருள் பெற்றுக்கொண்டமைக்காக இலங்கை மின்சாரசபை 91 பில்லயன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.