அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

14 Jan, 2022 | 06:16 AM
image

இயற்கைக்கு நன்றி வெலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் நாமும் வீரகேசரி இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது.

உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர இந்து மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தைப்பொங்கல் தினப் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் கலாசார ரீதியாகச் சிறப்பாகக்கொண்டாடுவதன் மூலம், எதிர்காலத்தில் வளமான பயிர் அறுவடைக்கு சூரிய பகவானின் ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் கிடைக்கின்றன என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகக் காணப்படுகின்றது.

சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்துடன் இணைந்த அனைத்து இலங்கையர்களும், தைப்பொங்கல் தினத்தை மிகுந்த மரியாதையுடன் எதிர்பார்க்கின்றனர்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும்.

 இது, பசுமை விவசாயத்துக்கான தேசிய கொள்கைக்குப் பலன் தரும் என்பதே பெரும்பான்மையானோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

அதற்கான நோக்கத்துக்கு இந்தத் தைப்பொங்கல் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக நான் நம்புகிறேன்.

இந்த வருடமும், சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே தைப்பொங்கலை அனைவரும் கொண்டாட வேண்டும்.

பாதுகாப்பான நாட்டின் செழிப்பு மற்றும் வளத்துக்காக அர்ப்பணித்துள்ள உங்களுக்கு, சூரிய பகவானின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா - அறுவடை விழா. இதுவே உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்ற தைப்பொங்கல் விழாவுக்கான அடிப்படையாகும்.

தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.

தமிழர்கள் தம் வாழ்வில் கொண்டாடி மகிழ்கின்ற பண்டிகைகளில் உன்னதமானதோர் நிகழ்வு இந்த தைத்திருநாளாகும்.

உழவர் பெருமக்கள் தங்களின் கடின உழைப்புக்கு பயன் நல்கிய இயற்கைக்கு, தமது நன்றியுணர்வினைத் தெரிவிக்கும் திருநாளாக இத்தைத்திருநாள் விளங்குகின்றது.

அதனால் இத்தைப்பொங்கல் திருநாளிலே அனைவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மகிழ்கின்றனர்.

இயற்கையின் பெருமைக்கு முக்கியத்துவம் நல்கும் இத்திருவிழா, நன்றி மறவாத உன்னத பண்பினை நம் அனைவருக்கும் எடுத்தியம்பி நிற்கிறது.

இனம், மதம், மொழி ஆகியவற்றினால் நம் தேசம் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்று சொல்வதிலே பெருமை கொள்வோம்.

நம் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாக அமைவதே இத்தேசத்தின் சுபீட்சத்துக்கான அத்திவாரம்.  

நாட்டைக் கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து  கொண்டாடும்  இத்தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது. இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும்.

அனைத்து மக்களும் நிறைந்த சௌபாக்கியத்துடன், அமைதியும் சமாதானமும் நின்று நிலைக்கும் வகையில், மகிழ்வோடு வாழ இந்த நன்னாளிலே எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான நன்னாளிலே, தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் எம் சக உறவுகளாகிய தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.

தைத்திருநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்  அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாழ் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை இறை பக்தியுடன் வெகு விமர்சையாக கொண்டாடும் நாள் இன்றாகும்.

விவசாயம் சார் சமூக கட்டமைப்பை  அடிப்படையாகக் கொண்ட இந்து சமூகம், செழிப்பான புத்தாண்டில் தனது முதல் அறுவடையை சூரியபகவானுக்கு பூஜிப்பதை அடிப்படையாகக் கொண்டு   கொண்டாடப்படுகின்ற இந்த பண்டிகையானது,பரம்பரை பரம்பரையாக இந்து மக்கள் மிக கௌரவமாகக கொண்டாடி வருகின்ற வைபவமாகும்.

மனிதர்கள்,விலங்குகள் மற்றும் இயற்கையின் மீது அன்பு,கருணை செலுத்துவதை தமது ஒரே நோக்கமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் இந்த பன்டிகை கொண்டாடப்படுகின்றன.

தைப்பொங்கலை மனிதர்களுக்கிடையேயான நட்புறவை வளர்ப்பதற்கான மற்றும் பரஸ்பர புரிதலுக்கான வாய்ப்பாக அறிமுகப்படுத்தலாம்.

தைப் பொங்கலன்று, வீடுகளும் கோவில்களும் கோலம் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய சடங்கு பொங்கல் சாதம் தயாரிப்பதேயாகும். இது வெளிப்புறத்தில் ஒரு அழகான மண் பானையில் பொங்கப்படும்.

சூரியக் கடவுளுக்கு முதல் பிரசாதம் வழங்குவது சாதாரண வழக்கமாகும். மிக பயபக்தியுடனும் கௌரவத்துடனும் சமைத்த பொங்கல் சாதத்தை அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொண்டு பரஸ்பர சகோதரத்துவம், விருந்தோம்பல், நட்பு மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி இவற்றைக் கொண்டு பேதங்களை நிர்மூலமாக்கக்கூடிய வைபவமே இந்த தைப்பொங்கல் வைபவமாகும்.

அத்தோடு இயற்கையோடு மென்மேலும் நெருங்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில், இயற்கையோடு இணைந்த தைப்பொங்கல் போன்ற கலாச்சார வைபவங்கள்  அவசியப்படுகின்றமை நிதர்சனமே.

மனித சமூகத்துக்கு இடையில் சுமுகமான தொடர்பை ஏற்படுத்துவதற்கு துணையாக அமைகின்ற இவ்வகையான அற்புதமான வைபவங்களின் முக்கியத்துவம் அற்பமானதல்ல என எதிர்கட்சி தலைவவர் அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42