( எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தொழில் நிமித்தமோ வேறு காரணங்களுக்காகவோ தற்காலிகமாக தங்கியிருக்கும் அனைவரையும் உடன் பதிவு செய்யும் திட்டமொன்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண பிரஜைகள் பொலிஸ் பிரிவூடாக இந்த திட்டம் ' தேசிய பாதுகாப்பை உறுதி செய்வோம் ; குற்றம், போதைப் பொருளை ஒழிப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹல் தல்துவ தெரிவித்தார்.
இந்த பதிவு நடவடிக்கைகளுக்காக வேண்டி பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது அத்தியாயத்துக்கு அமைய விண்ணப்பம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை இன்று ( 14) வெள்ளி, நாளை சனி, நாளை மறு தினம் ஞாயிறு தினங்களில் பெற்று பூர்த்தி செய்து பொலிஸாருக்கு வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.
' இந்த தற்கலிக வதிவாளர்களை பதியும் திட்டம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதை நோக்ககாக கொண்டது.
இன்று ( 14) முதல் மூன்று நாட்களுக்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீதிகள் ஊடாக பொலிஸ் பிரஜைகள் பிரிவின் அதிகாரிகள் வருவார்கள். அவர்களின் கைகளில் தற்காலிக வதிவாளர்களை பதிவு செய்யும் விண்ணப்பம் இருக்கும். அவற்றை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும். அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இதற்கென விஷேட கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ஒரு விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க முடியும்.' என தெரிவித்தார்.
இந்த பதிவு செய்யும் திட்டத்தின் கீழ் யாரின் தகவல்கலைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது தொடர்பிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ர்சர் நிஹால் தல்துவ விளக்கினார்.
' நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கொழும்புக்கு வந்து தங்கியுள்ளனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகார எல்லைக்கு உட்பட்ட அதாவது கொழும்பு மாநகர சபையின் கீழ் வரும் பகுதிகளில், நிரந்தர வதிவாளர்களின் வீடுகளில், வர்த்தக நிலையங்களில், நிறுவனங்களில், அரச மற்றும் தனியார் கட்டுமான வளாகங்களில், தங்கியிருக்கும் அனைத்து தற்காலிக வதிவாளர்களையும் பதிவு செய்ய வேண்டும் ' என தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுத்தல் ஆகியனவே இந்த பதிவின் நோக்கம் எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
எவ்வாறாயினும், கடந்த யுத்த காலத்தின் போதும், கொழும்பில் தங்கியிருந்தவர்கள் மீது இத்தகைய பொலிஸ் பதிவு முறைமை ஒன்று அமுலில் இருந்த நிலையில், அதனை ஒத்த கெடுபிடிகளுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்படும் பதிவு முறைமையும் வழிகோலுமா என பொது மக்கள் பீதியடைந்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM