வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா சென்.ஜோசப் ஆரம்ப வித்தியாலய மாணவி தேவராஜ் லதுர்ஷிகா 186 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

2016 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவராவார்.

இதேவேளை இதே வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான வீரரவி சதுர்ஷன் 185 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன் கிஷான் கனிஷ்கர் 185 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் 34 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன், மு.இராமசந்திரன்)