வெள்ளவத்தை பகுதியில் 40.5 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் நைஜீரிய பிரஜையெனவும் மற்றுமொரு நபர் உள்நாட்டு பிரஜையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.