இலங்கை விமானப்படையின்  வருடாந்த  “ கொமாண்டர் கோல்ப் கிண்ணம் 2022” போட்டிக்கான வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 12 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

இலங்கை இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண “ கொமாண்டர் கோல்ப் கிண்ணம் 2022” போட்டிக்கான வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலங்கை விமானப்படையின் 71 ஆவது வருட நிறைவை முன்னிட்டு குறித்த “ கொமாண்டர் கோல்ப் கிண்ணம் 2022” போட்டி இடம்பெறுகின்றது.

திருகோணமலை, சீனன் குடாவில் ஜனவரி மாதம் 21முதல் 23 ஆம் திகதி வரை கோல்ப் போட்டி நடைபெறவுள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்தார்.

இந்த கோல்ப் போட்டியில் ஆண், பெண் வீரர்கள் அடங்கலாக உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டியாளர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கு பிரதான அனுசாரணையாளராக டயலொக் விளங்குகின்றது.