இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகாரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 பதிப்பினை தென்னாபிரிக்கா அல்லது இலங்கையில் நடத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

IPL 2021: Alternate Captaincy Options Of All The 8 Teams If Regular  Skippers Face Sanctions Or Injuries

இந்தியாவில் அன்றாடம் அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படாவிடின் 2022 ஐ.பி.எல். தொடரை பிறிதொரு நாட்டில் நடத்துவதற்கு இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

தற்சமயம் இந்திய அணி தென்னாபிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் பின்னர் ஒருநாள் தொடரில் தென்னாபிரக்காவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்த தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதன் காரணமாக பி.சி.சி.ஐ. 2022 ஐ.பி.எல். தொடரை தென்னாபிரிக்காவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் காரணமாக அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.

இந் நிலையில் 2022 ஐ.பி.எல். தொடரை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கான திட்டங்கள் வெற்றியளிக்காவிடின், அடுத்த கட்டமாக போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கான மாற்று யோசனைகள் உள்ளதாகவும் இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கெடுப்பதன் மூலம் தொடர் மிக நீண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு, பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.