கொழும்பு வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா வீதியில் கரையொதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

யாழில் தோட்டக்கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk

குறித்த சடலம்  தனது சகோதரர் என, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உறுதிப்படுத்தியதாக வெள்ளவத்தை பொலிஸாா் மேலும் தெரிவித்துள்ளனா்.

54 வயதுடைய டி.பி. பியல் ஜயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்த தனது சகோதரர் நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்ததாக அடையாளம் காட்டிய நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து குறித்த சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.