இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு ; 200 புகையிரத சேவைகள் இரத்து

Published By: Vishnu

13 Jan, 2022 | 08:03 AM
image

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 200 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இன்று 80 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, ரயில்வே ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன் அறிவிப்பின்றி புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதனால் பொது மக்களும் புகையிரத நிலைய அதிபர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பில் இருந்து பெலியத்த, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு நீண்ட தூர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் நிர்வாகம் அறிவித்து பயணச்சீட்டுகளை வழங்கியதாகவும், ஆனால் நேற்றைய தினம் புகையிரத பயணங்களை இரத்து செய்ததாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்களினால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தே இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை...

2023-12-07 19:17:49
news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49
news-image

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

2023-12-07 14:40:24