(நா.தனுஜா)
சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அதனைச் செய்வதற்குப் பதிலாக இருள் சூழ்ந்த நாட்டையே மக்களிடம் கையளித்திருக்கின்றது என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் வெளியிட்டுள்ளார்.
'ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு' செயற்திட்டத்தின் கீழ் பருத்தித்துறை தள வைத்தியசாலைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்கள் திங்கட்கிழமை (10) வழங்கிவைக்கப்பட்டன.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசாங்கத்தின் மிகமோசமான அரச மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக நாட்டில் 'வரிசைகளில் நிற்கும் சகாப்தமொன்று' உருவாகியிருக்கின்றது.
இந்நிலை தொடரும்பட்சத்தில் வெகுவிரையில் மெழுகுவர்த்தி மற்றும் குப்பி விளக்குகளைக் கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையேற்படும்.
இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது. சுமார் ஒருவருடகாலமாக உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையே அதற்குச் சான்றாகும்.
நாட்டின் நிர்வாகத்தை முறையாக மேற்கொள்ளும்பட்சத்தில் மக்கள் மத்தியில் செல்வதற்கு ஆட்சியாளர்கள் ஒருபோதும் அஞ்சத்தேவையில்லை.
அந்தவகையில் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்கி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தலைமைத்துவத்தை எமது அரசாங்கம் வழங்கும் என்று உறுதியளிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
மேலும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு' செயற்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஜன சுவய' திட்டத்தின் ஊடாக 24 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்கள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் பருத்தித்துறை தள வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.
மேற்படி செயற்திட்டத்தின்கீழ் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM