கொழும்பு - மிதக்கும் சந்தை தொகுதிக்கு அண்மையில் உள்ள வாவியிலிருந்து ஆண் ஒருவரின்  சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.