பொரளை மற்றும் மிரிஹானை பொலிஸ் பகுதிகளில் பொது மக்களுடன் நட்புறவுடன் பழகி அவர்களை ஏமாற்றி அவர்களின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பெற்று பணம் மோசடி செய்யும் திட்டமிட்ட நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந் நிலையில் இந்த திட்டமிட்ட செயற்பாடு தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் அவரைக் கைது செய்ய பரந்துபட்ட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
இந்த மோசடி சம்பவம் குறித்து பொலிஸார் முன்னெடுத்த பிரத்தியேக விசாரணைகளின் பிரகாரம், ஏ.ரி.எம். இயந்திரங்களின் அருகில் இருந்து பல்வேறு சீ.சி.ரி.வி. காட்சிகள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த சந்தேக நபர் தற்போது தலை மறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன் அவர் தொடர்பில் தகவல்களை பொதுமக்களிடம் இருந்து கோருகின்றனர்.
அதன்படி சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் 0112694019 அல்லது 0112696950 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM