எல்ல – பசறை பிரதான வீதியில்,லொரி மோதியதில் ரஸ்யா நாட்டுப் பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி, ஆபத்தான நிலையில், பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

Articles Tagged Under: விபத்து | Virakesari.lk

இவ்விபத்தில் ரஸ்யா நாட்டைச் சேர்ந்த எலிசேவிடா என்ற 27 வயதுடைய சுற்றுலா பயணியே, லொரியினால் மோதுண்டு.படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பெண், எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து பசறைக்கு செல்லும் பிரதான பாதை வழியாக நடந்து சென்றுள்ளார்.

அவ்வேளையில் பின்னால் சென்ற லொரியொன்று, குறித்த பெண் மீது மோதியதில்? பெண் படுகாயங்களுக்குள்ளாகி, ஆபத்தான நிலையில், பதுளை அரசினர் வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி விபத்து குறித்து, எல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், லொரிச் சாரதியைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.