கொரோனாவின் புதிய தொற்றுக்கள் - மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் ; வைத்தியசாலை பணிப்பாளர்

By T Yuwaraj

12 Jan, 2022 | 01:22 PM
image

கொரோனாவின் புதிய தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க . ராகுலன் தெரிவித்துள்ளார் .

ஊடகவியலாளர் வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று நோயின் தாக்கம் சுகாதாரத் திணைக்களத்தின் கட்டுக்குள் இருக்கின்ற போதிலும் அது முற்று முழுதாக அபாய நிலைக்குள் அல்ல என்று நாங்கள் கருதிவிட முடியாது. புதிய திரிபுகள் மக்களிடம் பரவி வருகின்றது . 

எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அவதானமாகவும், பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் பேணி அவதானமாக செயற்பட வேண்டும்.

இதன் காரணமாகவே நாங்கள் வைத்தியசாலைக்கு பார்வையாளர்களாக வருபவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இதற்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வைத்தியசாலைக்கு தொடர்ந்து வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right