தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் சிரேஷ்ட தலைவர் ஆப்கானில் கொலை

By Vishnu

12 Jan, 2022 | 09:45 AM
image

தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) சிரேஷ்ட தலைவரான காலித் பால்டி என்ற மொஹமட் குராசானி ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் திங்களன்று உறுதிப்படுத்தினார்.

எனினும் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் பின்னணிய‍ை அவர் வெளியிடவில்லை.

50 வயதுடைய பால்டி தடைசெய்யப்பட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்ததாகவும், பாகிஸ்தான் மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது பல தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அவர் (பால்டி) அடிக்கடி காபூலுக்குச் சென்று வந்தார்.

பல்டி பல்வேறு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவுகளை ஒன்றிணைப்பதற்கும், TTP தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சூத்துடன் இணைந்து பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் அவர் கூறினார்.

எனினும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சிரேஷ்ட TTP உறுப்பினர் கொல்லப்பட்டதை மறுத்துள்ளார் மற்றும் அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right