பாராளுமன்றத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ள கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாக உள்ளது.
அதுதொடர்பாக கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றவுள்ள கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாட்கள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை பெற்றுத்தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரால் சபாநாயகரிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM