கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

12 Jan, 2022 | 06:56 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர்,நிதியமைச்சர் ஆகியோரின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெறும்.

கொழும்பு துறைமுகம் 2034 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  உலகில் சிறந்த துறைமுக பட்டியலில் 13 ஆவது இடத்திற்கு தரமுயர்த்தப்படும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் கடந்த காலங்களில் இராஜதந்திர மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும் நெருக்கடியினை எதிர்க்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் செய்துக் கொள்ளப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் பிரதான காரணியாக காணப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கையினை ஒன்றினைத்து கூட்டு ஒப்பந்தத்தையும்,இலங்கை-இந்தியா ஒன்றினைந்த அபிவிருத்தி செயற்திட்ட ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட்டது.

2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானததிற்கு தேசிய மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு தோற்றம் பெற்றதை தொடர்ந்து இராஜதந்திர மட்டத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன.

பேச்சுவார்த்தையின் பலனாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்;பட்டு அபிவிருத்தி செயற்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபை அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளது. முனையத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

கொழும:பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிலப்பரப்பை 1320 மீற்றரினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.முனையத்தின் முழுமையான அபிவிருத்தி பணிகள் 2034ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவு பெறும்.

கொழும்பு துறைமுகத்தில் மீள் ஏற்றுமதி  பணிகள் ஊடாகவே அதிக வருமானம் கிடைக்கப் பெறுகிறது.கொழும்பு துறைமுகத்தின் அனைத்து முனையங்களின் அபிவிருத்தி பணிகளும் 2034ஆம் ஆண்டு காலப்பகுதியில் முழுமையடையும்.

உலகில் சிறந்த துறைமுகங்களின் பட்டியலில் கொழும்பு துறைமுகம்23ஆவது இடத்தில் உள்ளது.2034ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் 13 ஆவது நிலைக்கு தரமுயர்த்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38