பொரளையில் உள்ள தேவாலய வளாகத்தில் இன்று கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Borella All Saints Church, Colombo | DestiMap | Destinations On Map

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் ஆலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தேவாலய ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டை பரிசோதிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.