அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பான முழுமையான அறிக்கையை நாளைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வருடத்தில் நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் கலந்துகொண்டார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சர் என்ற வகையில், ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்கவிற்கு கெஹலிய ரம்புக்வெல்ல இதன்போது பணிப்புரை விடுத்தார்.
தடுப்பூசிக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற உலகின் முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்று. 51 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்த நாட்டிற்கு கொண்டு வர முடிந்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.
கோவிட் நோயை அடக்குவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருவதால், மக்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள அரசு அதிகபட்ச சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும்.
மருந்துகளை இறக்குமதி செய்யும் போது உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகளுக்கு உரிய மதிப்பளித்து மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டும். அந்த மருந்துகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ரசித விஜேவந்த, அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM