(ஏ.என்.ஐ)

சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது பெய்ஜிங்கின் இறுக்கமான கட்டுப்பாடுகளினால் அதன் பொருளாதாரத்திற்கு சவால்களை ஏற்படுத்துவதுடன் தொழிலின்மைக்கு காரணமாகியுள்ளது. 

சீனாவில்  ஒரு காலக்கட்டத்தில் துடிப்பாக காணப்பட்ட  இணையத் தொழில் தற்போது  காணப்படும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  வேலையில்லா தொழில்நுட்ப தொழிலாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் வழிகாட்டுதலின் கீழ், கட்டுப்பாடற்ற வகையில் இத்துறையில் தலையீடுகள் காணப்படுகின்றன.

இதற்கிடையில், தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறை தொழில் சந்தையில்  பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில் பல இளம் சீனர்கள் குறைந்த ஊதியம் பெற்றாலும், இன்னும் நிலையான பதவிகளுக்கு தனியார் துறையை எதிர்பார்க்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் சீனாவில் 10 மில்லியன் கல்லூரி பட்டதாரிகள் இருப்பார்கள் என்று சீனாவின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

சுமார் 4.5 மில்லியன் பேர் பட்டதாரி பள்ளிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2021 இல் இருந்து 800,000 அதிகமாகும். 

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அரசுப் பணியாளர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இது 500,000 அதிகரித்துள்ளது என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம்,  கடந்த டிசம்பர்  மாதம் நடுப்பகுதியில், தவறாக பேசி விமர்சிப்பவர்களின் 20,000 க்கும் மேற்பட்ட  இணைய கணக்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அதன் நூற்றாண்டுக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் தொழில்நுட்பத் துறையை மாற்றுவதற்கான ஐந்தாண்டு வரைபடத்தை வெளியிட்டிருந்தது.  

மேலும், சீனாவின் ஒடுக்குமுறையானது பெய்ஜிங்கின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில் முனைவோர் உணர்வைக் கட்டுப்படுத்தியுள்ளது.