சீனாவுக்கான வியட்நாமிய விவசாய ஏற்றுமதி நிறுத்தப்பட்டது

By T. Saranya

11 Jan, 2022 | 03:13 PM
image

(ஏ.என்.ஐ)

கொவிட்-19 பரவல்  நெருக்கடி  மற்றும் சீன துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, பல வியட்நாமிய ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.  

சீன துறைமுகங்களில் நெரிசலுக்கு  தீர்வு காணுதல் மற்றும் வியட்நாம் ஏற்றுமதியாளர்களுக்கு தனிப்பயன் அனுமதி வழங்குதல் என்பன வியட்நாமியர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே சீன தரப்பால் உரிய தீர்வு வழங்கும் வரை ஏற்றுமதிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

சீன பங்குதாரருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனமொன்றின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், தங்கள் பொருட்களை வழங்குவதற்கு முன், தவிர்க்க முடியாத பல காரணிகளால் இறக்குமதி நிறுத்தப்பட்டதாக சீன  பங்குதாரர்கள் அறிவித்தாக குறிப்பிட்டார்.

சீன அரசாங்கம் 2022 முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. சீனாவின் கொவிட் -19 தடுப்பு விதிகளின் கீழ் அனுமதியின் தாமதமான வேகம் காரணமாக, நாட்டின் துறைமுகங்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வியட்னாமிய ஏற்றுமதிளாயர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாம் பழம் மற்றும் காய்கறி சங்கத்தின்  அறிவிப்பின்படி, சமீபத்திய வாரங்களில் சீனாவுக்கான கடல்சார் ஏற்றுமதி மிகவும் மந்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் பல   பொருட்கள்  முறைமுகத்திற்குள் அனுமதிக்காமையினால் கடலில் உள்ளன. 

இதனால் எமது ஏற்றுமதிகள் கடலில் கொட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சீனாவின் துறைமுக ஊழியர்கள் அடுத்த வாரம் புத்தாண்டு விடுமுறையை எடுக்கும்போது இந்த நிலைமை மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right