தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Image

அத்துடன் தென்னாபிரிக்காவின் உள்ளூர் அணியான டைட்டன்ஸின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாகவும் மோரிஸ் ஓய்வு குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மோரிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் 69 போட்டிகளில் தென்னாபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.

மேலும் உலகெங்கிலும் உள்ள சர்வதேச டி-20 லீக்குகளிலும் அவர் தனது திறனை வெளிப்படுத்தி வந்தார்.

குறிப்பாக 2021 இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடினார் மோரிஸ்.

தென்னாபிரிக்காவுக்காக நான்கு டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இறுதியாக 2019 ஜூலையில் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.