லட்சுமி மேனன் நடிக்கும் 'ஏ ஜி பி ஸ்கிசோஃப்ரினியா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

By T Yuwaraj

11 Jan, 2022 | 12:58 PM
image

சிறிய இடைவேளைக்கு பிறகு நடிகை லட்சுமிமேனன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'ஏ ஜி பி ஸ்கிசோஃப்ரினியா' படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நடிகை 'டஸ்கி பியூட்டி' ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஏ ஜி பி ஸ்கிசோஃப்ரினியா'. இதில் நடிகை லட்சுமிமேனன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் ஆர் வி பரதன், மோதீஸ்வரன், குழந்தை நட்சத்திரம் சாய் ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஸ்கிசோஃப்ரினியா என்ற மனநல கோளாறால் பாதிக்கப்பட்ட நாயகி லட்சுமி மேனன் அத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டாரா? இல்லையா? என்பது குறித்தும், அத்தகைய பாதிப்புக்கு ஏன் ஆளானார் என்பதை குறித்தும் விவரிக்கும் திரைப்படம்தான் 'ஏ ஜி பி ஸ்கிசோஃப்ரினியா'. இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்ட நடிகை லட்சுமி மேனன், நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தை பொங்கலுக்கு திரையிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.'' என்றார்

ஏஜிபி ஸ்கிசோஃப்ரினியா என்ற இந்த திரைப்படம் ஜனவரி 14 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டத்தில் பிரபலமான தனியார் வைத்தியசாலை ஒன்றின் பின்னணியில் நடைபெறும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்று தெரியவருவதால் ரசிகர்களிடத்தில் இதற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. பொங்கலுக்கு வெளியாகும் ஐந்து படங்களில் லட்சுமிமேனன் நடித்த இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமும் ஒன்று என்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right