பன்னாட்டு உயர்மட்டப்பிரதிநிதிகள் நால்வர் இம்மாதம் நாட்டிற்கு வருகை

By T. Saranya

11 Jan, 2022 | 03:01 PM
image

(நா.தனுஜா)

பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் உள்ளடங்கலாக வெளிநாடுகளின் உயர்மட்டப்பிரதிநிதிகள் நால்வர் இம்மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஸிஜார்டோ, துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மேவ்லற் கவுசோக்லு, பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் கொரிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியொங்க் - சியோக் ஆகியோரே இம்மாதம் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஸிஜார்டோ இன்றைய தினம் நாட்டிற்கு வருகைதருவார் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 18 ஆம் திகதி நாட்டை வந்தடைவார்.

அதேபோன்று கொரிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியொங்க் - சியோக்கின் இலங்கைக்கான விஜயம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மேவ்லற் கவுசோக்லு இம்மாத இறுதியில் நாட்டிற்கு வருகைதருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேற்று முன்தினம் திங்கட்கிழமையுடன் முடிவிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33