யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம். ( ATM )இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

வேனில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட ஐவர் கைது |  Virakesari.lk

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வங்கியின் ATM இயந்திரத்தில் இருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர். 

இந்நிலையில் சந்தேகநபரை அடையாளம் கண்டிருந்த பொலிஸார் , நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் , சுழிபுரம் மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.