ஐ.சி.சி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போனஸ் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது. 

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி சமநிலையில் முடிவடைந்ததன் மூலம் இலங்கை அணி இந்த நிலையினை மீண்டும் எட்டியுள்ளது.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 100 சதவீது வெற்றியுடன் 24 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 83.33% ஆக குறைந்துள்ளது. 

ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும், ஒன்றில் சமனிலையும் பெற்றுள்ளது.

Image