கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் திரை உலகம்

By Gayathri

10 Jan, 2022 | 08:00 PM
image

தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மூத்த நடிகர் சத்யராஜ், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை திரிஷா, நடிகை ஷெரின், இசையமைப்பாளர் தமன், இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா பரிசோதனையின் மூலம் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட இவர்கள், மருத்துவரின் அறிவுரையின் படி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

நடிகர் சத்யராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் ஒரு தருணத்தில் பல நட்சத்திர நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரசிகர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் நலமுடன் திரும்பி மீண்டும் கலை சேவையை தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்