முன்னணி நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நாய் சேகர்' பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'நாய் சேகர்'. 

இதில் முன்னணி நகைச்சுவை நடிகர் சதீஷ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை பவித்ராலட்சுமி நடிக்கிறார். 

இவர்களுடன் ஜோர்ஜ் மரியான், இசையமைப்பாளர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறது. பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அஜீஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் எழுதிய பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்தத் திரைப்படம் ஜனவரி 13ஆம் திகதியன்று வெளியாகும் என படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

பொங்கலன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் 'நாய் சேகர்' ‌படமும் இணைந்திருக்கிறது.