மின்விநியோத்தை துண்டிக்காது தொடர்ந்து வழங்க எதிர்பார்ப்பு - காமினி லொக்குகே 

By T. Saranya

10 Jan, 2022 | 05:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மின்விநியோகத்தில் காணப்படும் நெருக்கடி நிலைமை பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மின்உற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர், வலுசக்தி அமைச்சர் அமைச்சின் செயலாளர்,மின்சார சபையின் தலைவர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உட்பட துறைசார் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

அமைச்சர் காமினி லொகுகே மேலும் குறிப்பிட்டதாவது,

மின் உற்பத்திக்கு தேவையான உராய்வு எண்ணெயை மின்சார சபைக்கு விநியோகிக் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தை துண்டிக்காது தொடர்ந்து மின் விநியோகத்தை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடனை விரைவாக செலுத்த அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தடையின்றிய வகையில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு இலங்கை மின்சார சபையும்,பெற்றோலிய கூட்டுத்தாபனமும் ஒன்றினைந்து செயற்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தடையின்றிய வகையில் மின் விநியோகிப்பது அவசியமாகும்.மின்விநியோகம்,மின் உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையினால் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வு காணும் நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33