நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர், பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும், மற்றும் சிறிய இலாபத்தை வைத்துக்கொண்டு மொத்த விற்பனை விலையும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 1 கிலோ முட்டைகோஸ் 165 ரூபாவாகவும், 1 கிலோ கெரட் 295 ரூபாவாகவும், 1 கிலோ வெண்டைக்காய் 165 ரூபாவாகவும், 1 கிலோ முள்ளங்கி 85 ரூபாவாகவும்,1 கிலோ பீட்ரூட் 195 ரூபாவாகவும், மற்றும் 1 கிலோ உருளைக்கிழங்கு 260 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
முறையே 1 கிலோ பீன்ஸ் 270 ரூபாய், 1 கிலோ குடைமிளகாய் 1,300 ரூபாய், 1 கிலோ ப்ரோக்கோலி 2,300 ரூபாய், 1 கிலோ சிவப்பு முள்ளங்கி 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது என அவர் கூறினார்.
எனினும் ஹட்டனில் மொத்த விலை குறைந்துள்ள போதிலும் சில்லறை விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என நுகர்வோர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM