மவுன்ட் மௌங்கானுய் அரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்டு வரலாறு படைத்த பங்களாதேஷ், கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்டில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 521 ஓட்டங்களைக் குவிக்க, பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதற்கு அமைய முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் நியூஸிலாந்தை விட 395 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஷ் இருக்கின்றது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று (10) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 1 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 6 விக்கெட்களை இழந்து 521 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.
186 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த அணித் தலைவர் டொம் லெதம் 2ஆவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
மொத்தமாக 9 மணித்தியாலங்கள், 12 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 373 பந்துகளை எதிர்கொண்ட டொம் லெதம் 252 ஓட்டங்களைக் குவித்தார்.
2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் டெவன் கொன்வே 2ஆவது தொடர்ச்சியான சதத்தைப் பூர்த்தி செய்து 109 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 215 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
கொன்வே ஆடடமிழந்த பின்னர் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் ரொஸ் டெய்லர் 3ஆவது விக்கெட்டில் டொம் லெதமுடன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரொஸ் டெய்லர், ஹென்றி நிக்கல்ஸ் (0), டெரில் மிச்செல் (3) ஆகிய மூவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து லெதமுடன் ஜோடி சேர்ந்த டொம் ப்ளண்டெல் 6ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லெதம் ஆட்டமிழந்தார்.
நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டபோது ப்ளண்டெல் 57 ஓட்டங்களுடனும் கய்ல் ஜெமிசன் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பங்களதேஷ் பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம் 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஈபாதொத் ஹொசெய்ன் 143 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றனர்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் அடைந்தது.
ஷத்மான் இஸ்லாம் (7), மொஹமத் நய்ம் (0), நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ (4), மொமினுள் ஹக் (0), லிட்டன் தாஸ் (8) ஆகியோர் நியூஸிலாந்தின் இலக்கை நோக்கிய துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து சென்றார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த யாசிர் அலி, நூருள் ஹசன் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.
இவர்கள் இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நூருள் ஹசன் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஹசன் உட்பட கடைசி 5 விக்கெட்கள் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பெற்ற யாசிர் அலி 9ஆவதாக ஆட்டமிழந்தார்.
பின்வரிசையில் மெஹிதி ஹசன் மிராஸ் (5), தஸ்கின் அஹ்மத் (2), ஷொரிபுல் இஸ்லாம் (2) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் டிம் சௌதீ 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM