ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் ; மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

Published By: Priyatharshan

04 Oct, 2016 | 04:41 PM
image

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள இறுதி மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது மருத்துவ அறிக்கை நேற்று இரவு வெளியிட்டப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து, அவருக்கு சிகிச்சையளித்துவரும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுவரும் அறிக்கைகள் தற்போது குழப்பத்தை அதிகரித்துள்ளன. 

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22 ஆம்  திகதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்ச்சத்து இழப்பு, சளித்தொல்லை என்று காரணம் கூறி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. 

இரண்டாவது அறிக்கையில், தமிழக முதல்வர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது. 

அதேநேரம், முதல்வர் ஜெயலலிதா சில தினங்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். அதன்பிறகு அவருடைய அலுவல்களை பார்க்க முடியும் என்று அப்பல்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு மருத்துவர் ரிச்சர்ட் தெரிவித்ததன் பிரகாரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு எதற்காக, லண்டன் வைத்தியர் இங்கு வந்துள்ளார் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு ஐயங்கள் எழத் தொடங்கின.

அப்பல்லோவின் இரண்டாவது, மூன்றாவது மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக மூன்றாவது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நோய்த்தொற்று என குறிப்பிட்டுள்ளது. 

இது கூடுதல் தகவலாகும். நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தாலும், எந்த மாதிரியான நோய்த் தொற்று, அதன் தீவிரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்தான், மூன்றாவது அறிக்கையைவிட,  அதிக மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாசப் பிரச்சினை இருப்பதால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மெல்லமெல்ல, ஜெயலலிதா பெறும் சிகிச்சைகளை அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருப்பதால்தான், அப்பல்லோ மருத்துவமனை இதுகுறித்த கூடுதல் தகவல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டது என்கின்றனர் ஒரு பிரிவினர்.

மற்றொரு பிரிவினர் இதை ஆரோக்கியமான நடவடிக்கையாக பார்க்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலை முன்பைவிட தேறிவருகிறது. எனவேதான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், இவ்வளவு தைரியமாக அவர் செயற்கை சுவாச சிகிச்சையில் இருக்கிறார் என்பதை வெளியிட்டுள்ளது. எனவே ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று வாதிடுகிறது ஒரு தரப்பு.

ஆனால், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுவரும் அறிக்கைகளை கவனிப்போருக்கு ஒரு விடயம் புரியும். முதல் இரு அறிக்கைகளிலுமே, ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என குறிப்பிட்டு வந்த அப்பல்லோ மருத்துவமனை, கடந்த இரு அறிக்கைகளில், அவர் மருத்துவமனையில் மேலும் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றுதான் தெரிவித்துள்ளது. 

எனவே ஜெயலலிதா எப்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்பதில் அப்பல்லோ மருத்துவமனை குழம்பியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். அடுத்த அறிக்கையில் அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா வீடு திரும்ப வேண்டும் என்று அப்பல்லோ குறிப்பிட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலும் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52