மேல் மாகாணத்தில் பொதுமக்கள் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்கும் பொலிஸாரின் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் போக்குவரத்து பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

967 போக்குவரத்து பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தமாக 3,970 மோட்டார் சைக்கிள்களும், 3,420 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 1,779 சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.