இலங்கை அணியுடனான ஒருநாள்  கிரிக்கெட் தொடரில் ‍மோதுவதற்காக சிம்பாப்வே அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

May be an image of 3 people and people standing

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள் ஜனவரி 18 மற்றும் ஜனவரி 21 ஆம் திகதிகளில் அதே மைதானத்தில் நடைபெறும். 

கொவிட்-19-க்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் மூடிய கதவுகளின் கீழ் இந்த போட்டிகள் பகல் - இரவு ஆட்டங்களாக இடம்பெறும்.

May be an image of 7 people and people standing

May be an image of 4 people, people standing and indoor