அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயோர்க் நகரில் உள்ள 19 மாடி குடியிருப்பில் வீடு ஒன்றில் பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. 

தகவலறிந்து சென்ற 200க்கும் அதிகமான மீட்புப்படையினர் தீயை அணைத்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் தீயில் சிக்கியும் புகையால் மூச்சுத் திணறியும் உயிரிழந்துள்ளனர். 

60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதில் பாதிபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நியூயோர்க் நகர மேயர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த 2 ஆவது மோசமான தீ விபத்து இதுவாகும். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.