நாடளாவிய அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று முதல் வழமைபோல் இடம்பெறவுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இதுவரை காலமும் பாடசாலைகளில் பகுதி பகுதியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்துள்ள நிலையில் இன்று முதல் வழமை போன்று அனைத்து  வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்றைய தினம் முதல் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 1 - தரம் 13  வரையிலான அனைத்து வகுப்புகளும் வழமைபோன்று நடைபெறும்.

தற்போது கொவிட்-19 நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை வழமைபோல் மீண்டும் தொடங்குவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.