நேர்காணல்:- ஆர்.யசி

 தற்போதைய அரசியல் பொறிமுறையில் மாற்றம் அவசியமாகியுள்ளது. அவ்வாறான அரசியல்கலாசாரம் உருவாக்கிக் கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம், புரட்சிக்கான ஆரம்பம் தெளிவாகதெரிகிறது. அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க நாமும் ஒன்றினைவோம் என்று ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவினால் கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்விஇராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பொதுஜனபெரமுனவின் பாராளுமன்றஉறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.அவருடனான செவ்வி முழுமையாக,

கேள்வி:- தெல்கந்த சந்தையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் அநாவசியமானவையெனஇப்போது நினைக்கின்றீர்களா?  

பதில்:- நான் மக்களின் உண்மையான பிரச்சினைகளையும், அவர்கள் படும் கஷ்டத்தையுமேகூறினேன். நான் கூறியதில் எந்தவித பொய்களும் இல்லை என்பது சகலருக்கும் தெரியும். நாட்டில்விலை வாசியை பாருங்கள். 

நாட்டில் மரக்கறி மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்ககாலநிலையோ, அனர்த்தமோ காரணம் அல்ல. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் எடுத்த தவறானதீர்மானமே காரணமாகும். 

சரியான திட்டமிடல் இல்லை. எத்தனை வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதில் எத்தனைவர்த்தமானிகள் மீளவும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவை முறையான ஆட்சிக்கான அடையாளங்கள் அல்ல. 

உணவு தட்டுப்பாட்டிற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களே காரணம் என்று வெளிப்படையாகக்கூறினேன். அதில் எந்த தவறும் இல்லை. அதே நிலைப்பாட்டிலேயே இப்போதும் உள்ளேன். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-01-09#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/