முல்லைத்தீவை வாரிச்சுருட்டும் வன பாதுகாப்பு திணைக்களம்

By Digital Desk 2

09 Jan, 2022 | 08:41 PM
image

ஆர்.ராம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்று அத்துணை இயற்கைக் கொடைகளையும்தன்னகத்தே கொண்டது முல்லைத்தீவு மாவட்டம். 

துரதிஷ்டவசமாக அம்மாவட்டம் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் போரின் கோரமுகத்திற்குதற்போதும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது. உட்கட்டமைப்பு வசதிகள் முதல் அனைத்திலும்பின்னடைவில் இருக்கும் கவலைக்குரிய நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு வடக்கினதும், கிழக்கினதும் எல்லையாக உள்ளது.  இதனால் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தின் கட்டமைக்கப்பட்டநிகழ்ச்சி நிரலினை இங்கு முழுமையாக நடைமுறைச்சாத்தியமாக்க வேண்டிய பிரதேசங்களின் பட்டியலில்முதன்நிலையும் பெற்றுள்ளது. 

அம்மாவட்டத்தில் மக்கள் இன்னமும் முழுமையாக குடியேற்றப்படாத நிலையும்,வாழ்வாதார நிலங்கள் கைளிக்கப்படாத நிலையும் நீடித்துக் கொண்டிருக்கையில் எஞ்சியுள்ளநிலங்கள் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுகின்றன. 

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலனத்திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, என்று பொதுமக்களின் வாழ்வியல்,வாழ்வாதார நிலங்களை கபளீகரம் செய்யும் அரச கட்டமைப்புக்களின் பட்டியல் நீள்கின்றது.

வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பான 8,88,400 ஹெக்டெயரில் 3,92,164 ஹெக்டெயர்கள்காடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் உத்தியோக பூர்வமாகஅறிவித்துள்ளது. அதாவது வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 44சதவீதம் காடுகளாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-01-09#page-19

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right