சுசில் நீக்கம் ஆபத்து யாருக்கு?

By Digital Desk 2

09 Jan, 2022 | 08:13 PM
image

என்.கண்ணன்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தைக்கையில் எடுத்து, சுசில் பிரேமஜயந்தவின் மீது முதலாவது “பாசக் கயிற்றை”வீசியிருக்கிறார்”

“சுசில் பிரேமஜயந்த மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது,அரசாங்கத்தில் இனிமேல் கடும்போக்கை ஜனாதிபதி கையாளுவதற்கான அறிகுறிகளைவெளிப்படுத்தியிருக்கிறது”

 இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை, அதிரடியாக பதவியில்இருந்து நீக்கி, புத்தாண்டில் புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ.

இது ஜனாதிபதி எடுத்திருக்கின்ற தீர்க்கமான - கடுமையான - ஒருநடவடிக்கையாக கருதப்படுகிறது. ஏனென்றால், 2021ஆம் ஆண்டில், கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மிகவும்பலவீனமான நிலையை அடைந்திருந்தது.

பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும், குழப்பமானநிலைக்குள் தள்ளப்பட்டிருந்தது.

ஆட்சியில் இருக்கும் ராஜபக்ஷவினருக்கு நேரடியாகவே எதிர்ப்பையும், வெறுப்பையும்வெளிப்படுத்துகின்ற வகையில் அமைச்சர்களே செயற்பட்டனர்.

அரசாங்கத்தின் பல்வேறு முடிவுகள் தொடர்பாக ஆளும்கட்சியினரும்,அமைச்சர்களும், விமர்சனங்களை முன்வைத்தனர், குறைகளைக் கூறினர்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த காலத்தில் அவரை நாடு பெற்றிருக்கின்றஒரு அபூர்வமான செயற்திறன் கொண்ட தலைவர் என கொண்டாடியவர்களே, அவரை தோல்வியுற்றதலைவராக அடையாளப்படுத்தினர்.

அவரது முடிவுகள் தோல்வியடைந்துள்ளதாகவும், நாட்டை சீரழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

இவ்வாறானதொரு நிலையில் தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிறைவேற்றுஅதிகாரத்தைக் கையில் எடுத்து, சுசில் பிரேமஜயந்தவின் மீது முதலாவது “பாசக்கயிற்றை” வீசியிருக்கிறார்.

இத்துடன் நிற்காது இந்த ஆட்டம், இனிமேல் தான் இன்னும் பலரது தலைகள்உருளும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு காணப்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right