தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியம்

By Digital Desk 2

09 Jan, 2022 | 08:20 PM
image

சி.அ.யோதிலிங்கம் 

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பவிருந்தஆவணம் பலத்த இழுபறிக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ளது. “தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்” என்ற தலையங்கம் தான்வெளியில் பேசுபொருளாகியுள்ளது. 

பிரதமருக்கான ஆவணம், தமிழரசுக்கட்சியின் சார்பில் சம்பந்தன் வழிநடத்தலில்சுமந்திரன் மூலம் தயாரிக்கப்பட்டது. ரெலோ ஏனைய தலைவர்களின் இணக்கத்துடன் பிறிதொரு ஆவணத்தைதயாரித்தது. இந்த இரண்டின் சில பகுதிகளை இணைத்தே இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

     தலைப்பில் தமிழ் பேசும் மக்களின்அபிலாஷைகள் எனக் கூறியபோதும் முஸ்லிம் தரப்பும் மலையகத் தரப்பும் கையெழுத்திடும் செயன்முறையிலிருந்துவிலகியுள்ளன. முஸ்லிம் தரப்பு விலகியமைக்கு நியாயமான காரணங்கள் உண்டு. இலங்கை - இந்தியஒப்பந்தம் வடக்கு - கிழக்கு இணைப்பை தற்காலிகமாகவேனும் ஏற்கின்றது. 

வடக்கு,கிழக்கு மாகாணங்களை தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனக்கூறுகின்றது. முஸ்லிம் மக்கள் பற்றி ஒப்பந்தம் பெரிதாக எதையும் கூறவில்லை. அத்துடன்அவர்களுடன் ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடப்படவுமில்லை. 

ஆகவே முஸ்லிம்கள் மீது இந்திய,இலங்கை ஒப்பந்தம் பலவந்தமாக திணிக்கப்பட்டது எனக்கூறலாம். இதனால் முஸ்;லிம் தேசியவாதத்தின்தோற்றத்திற்கு இலங்கை - இந்திய ஒப்பந்தமும் காரணமாகியது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right