இந்தியா கோரும் உத்தரவாதம்

By Digital Desk 2

09 Jan, 2022 | 08:22 PM
image

சுபத்ரா

‘இந்தியா எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும்உடன்பாட்டைச் செய்து கொள்ளும் போது, இந்தியா சில பாதுகாப்பு (security)உத்தரவாதங்களை இலங்கையிடம் இருந்து  எதிர்பார்ப்பதாககூறப்படுகிறது’

 பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், திருகோணமலைஎண்ணெய் தாங்கிகள் விவகாரம் இப்போது அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

திருகோணமலையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 99 எண்ணெய்தாங்கிகளை நிர்வகிப்பது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் புதியதொருஉடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடத்தப்பட்டு வந்த பேச்சுக்கள் தீர்க்கமானதொரு கட்டத்தைஎட்டியுள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக,திருமலை பெற்றோலிய முனைய நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்பெறப்பட்டிருக்கிறது.

61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்து நிர்வகிக்கவுள்ள இந்தநிறுவனத்தில், 51 சதவீத உரிமையை இலங்கையும், 49 சதவீத உரிமையை இந்தியாவும்கொண்டிருக்கப் போகின்றன.

அத்துடன், இந்தியா பயன்படுத்தும் 14 தாங்கிகளை 50 ஆண்டுகளுக்குஇந்தியாவுக்கு வழங்கவும், ஏனையவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வைத்துக்கொள்ளவும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்த இணக்கப்பாட்டுக்குப் பின்னால் பல மறைமுகமான உடன்பாடுகள்,இருப்பதாகத் தெரிகிறது.

இலங்கையுடன் உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் போது இந்தியா மிகவும்கவனமாக இருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right