யார் பொறுப்பு ? அரசுக்குள் குழப்பம்

By Digital Desk 2

09 Jan, 2022 | 08:32 PM
image

சத்ரியன்

நாட்டின் தற்போதைய நிலைக்கு யார்பொறுப்பு என்பதில் அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் காரணம் ஜனாதிபதிதான் என்றும், அவரது தவறான முடிவுகளும், தவறான நிர்வாகம் மற்றும் வழிநடத்தலுமே,நாட்டை படுகுழிக்குள் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

குறிப்பாக, பசுமை விவசாயம்தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த முடிவு, தான் விவசாயத்துறையில் ஏற்பட்டிருக்கின்றவீழ்ச்சிகளுக்கு காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தி, ஐ.தே.க., ஜே.வி.பி. போன்றகட்சிகள் கூறியிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டைக் கூறியஅமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.

தற்போதைய நிலைக்கு காரணமானவர்என்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருபவர்களில் ஒருவர் விவசாய அமைச்சர்மகிந்தானந்த அழுத்கமகே.

தமது பசுமை விவசாயக் கொள்கையைநடைமுறைப்படுத்துவதற்கு, விவசாய அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றுஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், விவசாய அமைச்சரே தற்போதுவிவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கும் நெருக்கடிகளுக்கும் காரணம் என்று, சகஅமைச்சர்கள் சிலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும், அமைச்சர் மகிந்தானந்தஅழுத்கமகே, தமது செயலாளர்களின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முனைகிறார்.

வெளியக ஆலோசனைகளை கேட்டு நடந்துகொண்டதால் தான், விவசாய அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர் என்று அவர்நியாயப்படுத்தியிருக்கிறார்.

இறுதியாக விவசாய அமைச்சின்செயலாளராக இருந்த பேராசிரியர் உதித் ஜயசிங்க ஆற்றல் கொண்டவராக விளங்கினார்என்றும், ஆனால் கடைசியில் அவரும், வெளிப்புற சக்திகளின் வலைக்குள் விழுந்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right