ஹரிகரன்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்பட்டு, திடீரென கடந்த வியாழக்கிழமை அதுதொடர்பான உடன்பாடும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
பல மாதங்களுக்கு முன்னர், இந்தியாவுடனான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் எண்ணெய் தாங்கிகள் இலங்கையின் வசமாகிவிடும் என்றும் கூறியிருந்தார் அமைச்சர் உதய கம்மன்பில. அப்போது இந்தியா அதனை நிராகரித்திருந்தது.
எனினும், தற்போது, இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் கம்மன்பில கூறியிருப்பதை இந்தியா மறுக்கவில்லை.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதிகளில் உள்ள, 14 தாங்கிகளை லங்கா ஐ.ஓ.சி க்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கவும், 24 தாங்கிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யவும், எஞ்சிய 61 தாங்கிகளை இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் - திருகோணமலை எரிபொருள் முனைய நிறுவனத்தின் - மூலம் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன் உடன்பாடும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. குறித்த கூட்டு நிறுவனத்தில் 51 சதவீத உரிமையை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 49 சதவீத உரிமையை லங்கா ஐ.ஓ.சி யும் கொண்டிருக்கும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-4
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM